நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

ஹிமாசலில் 150 பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை; 3,500 பள்ளிகளில் 1 ஆசிரியர் மட்டும்!

ஹிமாசலப் பிரதேசத்தில் 150 பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை; 3,500 பள்ளிகளில் ஓர் ஆசிரியர் மட்டும் உள்ளது குறித்து...

HimachalPradesh Chief Minister Sukhvinder Singh Sukhu

ஹிமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு - கோப்புப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 8:16 pm IST

ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள 150 பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை; 3,500 பள்ளிகளில் ஓர் ஆசிரியர் மட்டும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் இல்லாமலோ அல்லது ஒரே ஒரு ஆசிரியருடன் பள்ளிகள் இயங்குவது குறித்த பிரச்னை, ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவையில் புதன்கிழமை (செப். 2) பெரும் விவாதமாக மாறியிருக்கிறது.

தனது தொகுதியான பச்சாடில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னையை எழுப்பி, பள்ளிகள் ஆசிரியர் இல்லாமல் இயங்கி வருவதை பாஜக எம்எல்ஏ ரீனா காஷ்யப் சுட்டிக்காட்டினார். மேலும், தனது பகுதியில் ஆசிரியர்களை நியமிக்குமாறு அரசை அவர் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த ரோஹித் தாக்கூர், “மாநிலத்தில் 1:10 என்ற விகிதத்தில் மாணவர் - ஆசிரியர் விகிதம் உள்ளது. அதாவது ஒவ்வொரு 10 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில அரசு இதுவரை 9,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியுள்ளது. தற்போதைய அரசின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் மேலும் 6,500 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இருப்பினும், மாநிலத்தில் 150 பள்ளிகள் ஆசிரியர்கள் இல்லாமலேயே இயங்குகின்றன. மேலும் 3,500 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, 2,500 பள்ளிகளில் 15-க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, பல்வேறு எம்எல்ஏக்கள் எங்கள் தொகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது போன்ற குற்றச்சாட்டுகளை வைத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Reports indicate that there are no teachers in 150 schools in Himachal Pradesh, while 3,500 schools have only one teacher.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.