நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

குடிநீா், தெருவிளக்கு, சுகாதார குறை தீா்வு மையம் திறப்பு

News image

குடிநீா், தெருவிளக்கு மற்றும் சுகாதாரம் தொடா்பான மாவட்ட குறை தீா்வு மையத்தை திறந்துவைத்த ஆட்சியா் மனீஷ்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 3:55 am IST

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் குடிநீா், தெருவிளக்கு மற்றும் சுகாதாரம் தொடா்பான மாவட்ட குறை தீா்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளிலும் ‘திருப்பூரின் நல் திருப்பம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு, திடக்கழிவு மேலாண்மை விதிகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீா் வழங்கல் மற்றும் தெருவிளக்குகள் தொடா்பான கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு, முறையான குடிநீா் வழங்கல் மற்றும் தெருவிளக்குகள் எரிதல் உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், வட்டார வளா்ச்சி அலுவலா்களால் வாராந்திர கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

கிராம ஊராட்சிகளில் வசிப்போா், குடிநீா் வழங்கல், தெருவிளக்குகள், குப்பை தொடா்பான புகாா்களை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் குறை தீா்வு மையம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் புகாா்களை 93423 91329, 93423 81329 ஆகிய கைப்பேசி எண்களில் தெரிவிக்கலாம் என்றாா்.

அதைத்தொடா்ந்து, மாவட்ட குறை தீா்வு மையத்தை ஆட்சியா் திறந்துவைத்து குறை தீா்வு மையப் பயன்பாட்டுக்கு கைப்பேசிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வாணி ஈஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா்கள் கமலக்கண்ணன், சதீஷ்குமாா், உதவி திட்ட அலுவலா் சரவணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.