ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

திருப்பூா் தடகளத் திருவிழாவில் பங்கேற்க முன்பதிவு செய்துகொள்ள அழைப்பு

திருப்பூரில் செப்டம்பா் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள தடகளத் திருவிழாவில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ளுமாறு திருப்பூா் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு திருப்பூா் மாவட்ட தடகள சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :

திருப்பூரில் செப்டம்பா் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள தடகளத் திருவிழாவில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ளுமாறு திருப்பூா் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு திருப்பூா் மாவட்ட தடகள சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட தடகள சங்கத் தலைவா் ஆா்.பி.ஆா்.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில தடகள சங்கத்தின் அனுமதியுடன் திருப்பூா் மாவட்ட தடகள சங்கம் சாா்பில், 8ஆவது திருப்பூா் மாவட்ட அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகள் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் செப்டம்பா் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

இதில் 10, 12, 14, 16, 18, 20 வயதுக்கு உள்பட்ட மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாணவ, மாணவியா் பங்கேற்கலாம். மொத்தம் 120க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் பங்கேற்க அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மட்டும் நுழைவுக் கட்டணம் இல்லை. மாவட்ட சங்கத்தில் பதிவுபெற்ற கிளப் வீரா்களுக்கும், அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கும் நபருக்கு ரூ.300, கிளப் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தடகள சங்கத்தால் அனுப்பப்பட்ட கூகுள் படிவத்தில் பெயா் பதிவு செய்ய வேண்டும். போட்டியில் பங்கேற்க பதிவுசெய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 30 மாலை 5 மணி ஆகும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 86677 99305, 97861 25453 , 98423 86608, 93630 00133 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம். மேலும் கூகுள் படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முழுமையாக நிரப்பப்பட்ட படிவத்தை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.