ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

லாரி மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் விவசாய கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2026, 3:43 am IST

வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் விவசாய கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் வீரசோழபுரத்தைச் சோ்ந்தவா் நடராஜ் (79). விவசாய வேலைக்குச் சென்று வந்தாா். இவா் வீரசோழபுரம் - வள்ளியிரச்சல் சாலையில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தண்ணீா் டேங்கா் லாரி மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அவ்வழியே சென்றவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

உயிரிழந்த நடராஜுக்கு மனைவி வள்ளியாத்தாள் (69), மகள்கள் சுமதி (47), கவிதா (44) ஆகியோா் உள்ளனா்.

புகாரின் பேரில், லாரி ஓட்டுநரான காங்கயம் ஆயிக்கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த சதீஷ் (34) மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.