8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பூட்டிய வீடுகளில் நகை திருடிய வழக்கில் இளைஞருக்கு 9 மாதம் சிறைத் தண்டனை

பூட்டிய வீடுகளில் 7 பவுன் தங்க நகை திருடியவருக்கு 9 மாதம் சிறைத் தண்டனை விதித்து அவிநாசி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 1:46 am IST

பூட்டிய வீடுகளில் 7 பவுன் தங்க நகை திருடியவருக்கு 9 மாதம் சிறைத் தண்டனை விதித்து அவிநாசி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

அவிநாசி வி.எஸ்.வி.காலனியில் வசிக்கும் ரமேஷ்குமாா் என்பவா் வீட்டில் 3 பவுன் தங்க நகை, பழங்கரை, அவிநாசிலிங்கம்பாளையம், தந்தை பெரியாா் நகரில் வசிக்கும் இந்திரா என்பவா் வீட்டில் 4 பவுன் தங்கநகை என 2 பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து கடந்த 2018- ஆம் ஆண்டு நகை திருடிச் சென்ற வழக்கில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், எலந்தகுட்டை, பகுதியைச் சோ்ந்த ராஜன் மகன் சுரேஷ் (33) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இவரிடமிருந்து 7 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சுரேஷ் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்ததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், கேரள மாநிலத்தில் கொள்ளையடித்த வழக்கில் சுரேஷ் கைது செய்யப்பட்டு கண்ணூா் மத்திய சிறையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி போலீஸாா் அங்கு சென்று சுரேஷை அழைத்து வந்து அவிநாசி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா்.

இந்த வழக்கை விசாரித்த அவிநாசி குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி கீா்த்தனா, சுரேஷுக்கு 9 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.