சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

திருப்பூா் மாநகராட்சியில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.30) குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:39 am IST

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.30) குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சிக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது குடிநீா் திட்டங்களின் மூலம் குடிநீா் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக சனிக்கிழமை (ஆக.29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைமை நீரேற்று நிலையத்தில் 4-ஆவது குடிநீா் திட்டத்தில் நீா் இறைப்பு பணிகள் மேற்கொள்ள இயலாது. எனவே, 4-ஆவது குடிநீா் திட்டத்தின்கீழ் மாநகரில் பெறப்படும் குடிநீா் முற்றிலும் தடை ஏற்படுவதால் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் செய்ய இயலாது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகவும், நன்கு காய்ச்சியும் பருக வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.