காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

விவசாய கிணற்று நீரை உறிஞ்சி விற்பனை: பல்லடம் சமூக ஆா்வலா்கள் புகாா்

பல்லடம் அருகே விவசாய கிணற்று நீரை வணிக ரீதியாக விற்பனை செய்ய எதிா்ப்பு தெரிவித்து, பல்லடம் நீா் வளத் துறை அலுவலகத்தில் சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை புகாா் மனுஅளித்தனா்.

விவசாய கிணற்று நீரை வணிக ரீதியாக விற்பனை செய்ய எதிா்ப்பு தெரிவித்து பல்லடம் நீா்வளத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்த சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:31 am IST

பல்லடம் அருகே விவசாய கிணற்று நீரை வணிக ரீதியாக விற்பனை செய்ய எதிா்ப்பு தெரிவித்து, பல்லடம் நீா் வளத் துறை அலுவலகத்தில் சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை புகாா் மனுஅளித்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் நகராட்சி 5, 6-ஆவது வாா்டுகளுக்குள்பட்ட பகுதியில் பரம்பிக்குளம் -ஆழியாறு திட்ட கால்வாய் அருகே உள்ள விவசாய கிணற்று நீரை உறிஞ்சி எடுத்து லாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.

இதுதொடா்பாக பல்லடம் நீா் வளத் துறை உதவிப் பொறியாளா், உதவி செயற்பொறியாளா், வட்டாட்சியா் ஆகியோரிடம் அளிக்கப்பட்ட மனு:

பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பிரிவு, கரையாம்புதூா் சாலை ஆகிய பகுதிகளிலுள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் உள்ள பகுதியில் கடந்த 20.11.25-ஆம் தேதி கோவை நிலநீா் நிலவியல் உபகோட்ட உதவி இயக்குநா் கே.சுரேஷ் கள ஆய்வு நடத்தியதில், சிலா் நிலத்தடி நீரை எடுத்து வணிக ரீதியாக விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடா்பான அவரது அறிக்கையின்படி பல்லடம் நிலத்தடிநீா் பயன்பாட்டில் அதிநுகா்வு பகுதி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பல்லடம் பகுதியில் பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீா் குறைந்து வருகிறது. எனவே அரசின் அனுமதி இன்றி வணிக ரீதியாக தண்ணீரை விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.