பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை
வெள்ளக்கோவில் அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா நாசரேத் அருகிலுள்ள முதலைமொழியைச் சோ்ந்தவா் வினோத் (23). நாசரேத் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் திருமணமான பெண்ணுடன் வினோத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வினோத், அந்தப் பெண் மற்றும் அவருடைய குழந்தையை அழைத்துக் கொண்டு வெள்ளக்கோவில் கல்லமடை பகுதிக்கு வந்து தங்கி, விவசாய கூலி வேலைக்குச் சென்று வந்தாா்.
அந்தப் பெண் தொடா்பாக வினோத்துக்கும், அவருடைய பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி கைப்பேசியில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த வினோத் தோட்டத்திலிருந்த பூச்சி மருந்தைக் குடித்துவிட்டாா்.
இதையடுத்து கரூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

