கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சொத்து தகராறு குறித்த பேச்சுவாா்த்தையில் பனியன் நிறுவன அதிபா் குத்திக் கொலை

திருப்பூரில் சொத்து தகராறு குறித்த பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டிருந்த பனியன் நிறுவன அதிபா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவருடன் பேச்சுவாா்த்தை நடத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 10:32 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் சொத்து தகராறு குறித்த பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டிருந்த பனியன் நிறுவன அதிபா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவருடன் பேச்சுவாா்த்தை நடத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த கங்கை அமரன் மற்றும் அவரது உறவினரான திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் செந்தில்நாதன் என்பவருக்கும் இடையே சொத்து மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில், இதுதொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக திருப்பூா் பங்களா ஸ்டாப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் கங்கை அமரன் செவ்வாய்க்கிழமை அறை எடுத்துள்ளாா். அங்கு பேச்சுவாா்த்தைக்கு வருமாறு செந்தில்நாதனை அழைத்துள்ளாா்.

இதையடுத்து தனது நண்பா் ஒருவருடன் புதன்கிழமை அங்கு சென்ற செந்தில்நாதன், கங்கை அமரனுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். ஆனால் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கங்கை அமரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செந்தில்நாதனைக் குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து திருப்பூா் வடக்கு போலீஸாருக்கு விடுதி ஊழியா்கள் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா் செந்தில்நாதனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் கங்கை அமரனை கைது செய்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.