சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் ரயில்வே கேட் இன்றும் மூடல்

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் ரயில்வே கேட் இன்றும் (பிப்.26) மூடப்படுகிறது.

News image
ரயில்வே கேட். - கோப்புப்படம்.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:17 pm

தினமணி செய்திச் சேவை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் ரயில்வே கேட் இன்றும் (பிப்.26) மூடப்படுகிறது.

திருப்பூா்-ஊத்துக்குளி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. தண்டவாளப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள பழைய கருங்கல் ஜல்லிகள் அகற்றப்பட்டு புதிதாக கொட்டப்படுகிறது. மேலும், தண்டவாளத்தை பலப்படுத்தும் பணியிலும் ஏராளமான தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் 2-ஆவது ரயில்வே கேட் பகுதியில் நடைபெற்றுவரும் பராமரிப்புப் பணிக்கு வசதியாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணியில் இருந்து வியாழக்கிழமை மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என்று ரயில்வே துறை அறிவிப்புப் பலகை வைத்துள்ளது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக அனைத்து ரயில்களும் மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்கின்றன.