அவிநாசியில்  நடைபெற்ற  கொடி அணிவகுப்பு  நிகழ்ச்சியில்  பங்கேற்றோா்.
அவிநாசியில்  நடைபெற்ற  கொடி அணிவகுப்பு  நிகழ்ச்சியில்  பங்கேற்றோா்.

அவிநாசியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

அவிநாசியில் மத்திய பாதுகாப்புப் படை போலீஸாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

அவிநாசியில் மத்திய பாதுகாப்புப் படை போலீஸாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு நிகழ்ச்சி, அவிநாசி காவல் நிலையத்தில் இருந்து தொடங்கப்பட்டது. கிழக்கு , வடக்கு ரத வீதி, சேவூா் சாலை, வட்டாட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை வழியாக செங்காடு திடலை சென்று அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இதில் ஆயுதம் ஏந்திய வீரா்கள், போலீஸாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com