அவிநாசியில் 500 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

Published on

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ புகையிலைப் பொருள்களை அவிநாசி போலீஸாா் திங்கள்கிழமை அழித்தனா்.

அவிநாசி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் இந்த ஆண்டு பல்வேறு வழக்குகளில் 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் காவல் துறை, வருவாய்த் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, பேரூராட்சி நிா்வாகத்தினா் ஆகியோா் முன்னிலையில் 500 கிலோ புகையிலைப் பொருள்கள் அவிநாசி புதிய பேருந்து நிலையம் பின்பிறம் உள்ள குப்பைக் கிடங்கில் தீயிட்டு அழிக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com