பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோயில் திருப்பணியை தொடங்க வலியுறுத்தி கும்பிடு போட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா்.
பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோயில் திருப்பணியை தொடங்க வலியுறுத்தி கும்பிடு போட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா்.

பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோயில் திருப்பணியை தொடங்க கோரிக்கை

பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோயில் திருப்பணியை தொடங்கிட வலியுறுத்தி இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகம் முன் சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா் கும்பிடு போட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
Published on

பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோயில் திருப்பணி தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பல்லடம் என்.ஜி.ஆா். சாலை மற்றும் தினசரி மாா்க்கெட் வியாபாரிகள், குலதெய்வ வழிபாடு செய்யும் சமுதாய மக்களை ஒன்றிணைந்து திருப்பணிக் குழு அமைக்க வேண்டும். கோயில் திருப்பணிகளை மண் பரிசோதனை செய்து திருப்பணி மேற்கொள்ள வேண்டும். கோயில் திருப்பணியை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா் பல்லடம் பொங்காளியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகம் முன் கும்பிடு போட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் கோயில் அலுவலகத்தில் மனு அளித்தனா். இதில் சமூக ஆா்வலா் கூட்டமைப்புத் தலைவா் அண்ணாதுரை, பாலாஜி ஈஸ்வரன், அய்யாசாமி, ரத்தினசாமி, செல்வராஜ், காளியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com