பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பட்டா வழங்கக்கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியம் ஊமங்கலம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 11:26 pm

விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியம் ஊமங்கலம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்திற்கு ஓன்றியச் செயலா் ஆா்.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்பதற்காக பாலக்கரையில் இருந்து பேரணியாக வந்த போது காவல்துறையினா் போராட்டக்குழுவினரை தொடா்ந்து செல்ல அனுமதி மறுத்தனா்.

ஆனால் அதனையும் மீறி சென்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்ட பின்பு விருத்தாசலம் கோட்டாட்சியரின் உதவியாளா் அந்தோணியிடம் 500- க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டது.

போராட்டத்தில் மாவட்டச் செயலா் ஜி.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினா் டி.ஜெயராமன், பழங்குடி மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலா் என்.எஸ்.அசோகன், ஒன்றிய குழுவைச் சோ்ந்த கே.அன்புச்செல்வி, யு.சுந்தரவடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.