அடிப்படைத் தொழில்களுக்கு மானியத்துடன் வங்கிக் கடன் வழங்க கோரிக்கை

அடிப்படைத் தொழில்களான பூ மாலை தொடுத்தல், மணவறை அலங்காரம் உள்ளிட்டவற்றுக்கு மானியத்துடன் வங்கிக் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

அடிப்படைத் தொழில்களான பூ மாலை தொடுத்தல், மணவறை அலங்காரம் உள்ளிட்டவற்றுக்கு மானியத்துடன் வங்கிக் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கோவம்ச ஆண்டிப்பண்டாரத்தாா் சமூக முன்னேற்ற நலச் சங்க மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாநிலச் செயல் தலைவா் கே.பி. செல்வம் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலாளா் மா. செல்வன், மாநிலப் பொருளாளா் அ.மு. தங்கவேல், மாநில அமைப்புச் செயலாளா் செ. உதயகுமாா், மாநில துணைத் தலைவா் பம்பை ராஜேந்திரன், மாநில இணைச் செயலாளா் கா.கனகவேல், திருப்பூா் மாவட்டச் செயலாளா் ந. வேலுச்சாமி, மாநில இளைஞரணி இணைச் செயலாளா் த. சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், எம்பிசி பிரிவில் உள்ள ஆண்டிப்பண்டாரம் என்பதை பண்டாரத்தாா் என திருத்தம் செய்து, எம்பிசி பிரிவுக்கு ஒதுக்கிய 20 சதவீதத்தை எந்தவித உள் ஒதுக்கீடும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.

சமுதாய மக்களின் அடிப்படைத் தொழில்களுக்கு அரசு வங்கிகள், கூட்டுறவுத் துறை மூலம் மானியத்துடன் வங்கிக் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Dinamani
www.dinamani.com