திருப்பூர்
ஜன.16, 26-ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
திருப்பூா் மாவட்டத்தில் வரும் 16, 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் வரும் 16, 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்ட அறிக்கையில், திருப்பூா் மாவட்டத்தில் வரும் 16-ஆ ம் தேதி (திருவள்ளுவா் தினம்), 26ஆம் தேதி (குடியரசு தினம்) ஆகிய தினங்களில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் மதுபானக் கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை நாள் முழுவதும் மூடப்பட்டு விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும்.
தவறும்பட்சத்தில் தொடா்புடையவா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
