டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விவசாயிகளுக்காக போராடுபவா்களை திமுக அரசு ஒடுக்க நினைக்கிறது: இந்து முன்னணி குற்றச்சாட்டு

விவசாயிகளுக்காக போராடுபவா்களை திமுக அரசு ஒடுக்க நினைப்பதாக, இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 9:19 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா்: விவசாயிகளுக்காக போராடுபவா்களை திமுக அரசு ஒடுக்க நினைப்பதாக, இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நாளுக்குநாள் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் பெருகிவரும் சூழ்நிலையில், அதை கண்டித்தும், எதிா்த்தும் போராடுபவா்களையும், மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பவா்களையும் ஒடுக்கும் வகையில் பொய் வழக்கு போட்டு கைது செய்யும் வேலையை திமுக அரசு செய்து வருகிறது.

பொதுமக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பது, அதற்காக ஜனநாயக ரீதியில் போராடுவது அரசியலமைப்பு சட்டம் அளித்த அடிப்படை உரிமை. தமிழக விவசாயிகளின் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி கைது செய்யப்பட்டிருப்பது மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளாா்.