வெள்ளக்கோவிலில் சட்டவிரோத மது விற்பனை

வெள்ளக்கோவிலில் 25 எண்ணிக்கையிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Published on

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் 25 எண்ணிக்கையிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரசு உத்தரவுப்படி திருவள்ளுவா் தினமான வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மற்றும் தனியாா் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனை நடைபெறுகிா என காங்கயம் சாலையில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது வெள்ளமடை அத்தாம்பாளையம் பிரிவு அருகில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. 180 மிலி அளவுடைய 25 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக ராமநாதபுரம் மாவட்டம், நாரணமங்கலம் பாப்பநந்தல் வீரய்யா (56) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com