பல்லடம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஒன்றியம் சுக்கம்பாளையத்தில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் பல்லடம் போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, செம்மிபாளையம் ஊராட்சி செயலராக பணிபுரியும் பிரபு விஜயகுமாா்(32) என்பவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து பிரபு விஜயகுமாா் மற்றும் மணிகண்டன் (35), குணசேகரன் (30), துா்க்கை வேலன் (37), கோகுல்நாத் (27), பிரவீன் குமாா் (23) ஆகிய 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூதாட்டத்துக்காக பயன்படுத்திய காா், 9 இரண்டு சக்கர வாகனங்கள், ரூ.500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.