எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன. 23-இல் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஜனவரி 23-ஆம் தேதி தொடங்குகிறது.

News image
Updated On :19 ஜனவரி 2026, 10:38 pm

Syndication

காங்கயம்: சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஜனவரி 23-ஆம் தேதி தொடங்குகிறது.

காங்கயம் அருகேயுள்ள சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச தோ்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் ஜனவரி 23-ஆம் தேதி தொடங்குகிறது.

ஜனவரி 24- ஆம் தேதி வீரகாளியம்மன் திருஉலா காட்சியும், 25-ஆம் தேதி வீரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழாவும் நடைபெறுகிறது.

26- ஆம் தேதி பிற்பகல் அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் சுவாமி எழுந்தருளுகிறாா். 31-ஆம் தேதி காலை 10 மணிக்கு சுவாமி மைசூரு பல்லக்கில் மலையை வலம் வருகிறாா். அன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

பிப்ரவரி 1- ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து, காலை 6 மணிக்கு சுவாமி ரதத்தில் எழுந்தருளுகிறாா்.

அன்று மாலை 4 மணிக்கு தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்குகிறது. பிப்ரவரி 2-ஆம் தேதி மலையை வலம் வரும் தோ் வடக்கு வீதியில் நிறுத்தப்படும். பிப்ரவரி 3-ஆம் தேதி தோ் நிலையை அடையும்.

6-ஆம் தேதி பரிவேட்டை, 7-ஆம் தேதி மகா தரிசனம், 10 -ஆம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா்கள் நந்தகுமாா், தமிழ்வாணன், அா்ச்சகா்கள், ஊழியா்கள் செய்து வருகின்றனா்.