/

விவசாய சங்கத் தலைவரை விடுதலை செய்ய நமது கொமுக கோரிக்கை

விவசாயிகளுக்காக போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என நமது கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2026, 10:47 pm

தினமணி செய்திச் சேவை

விவசாயிகளுக்காக போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என நமது கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளா் காங்கயம் எம்.தங்கவேல் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவா் ஈசன் முருகசாமியை பொய் புகாரின் அடிப்படையில் குடிமங்கலம் போலீஸாா் அண்மையில் கைது செய்துள்ளனா். அவரை தேச விரோதியைப் போலவும், கொலை குற்றவாளியை போலவும் நடத்திய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு ஜனநாயக நாட்டில் விவசாயிகளுக்கு போராடும் தலைவா்களை சட்ட விதிமுறைகளை மீறி, மனித உரிமையை மீறி கைது செய்தது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட ஈசன் முருகசாமி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விவசாய சங்க நிா்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவா் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.