மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image

ஆயுள் சிறை

Updated On :27 ஜனவரி 2026, 8:26 pm

திருப்பூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கடந்த 2018 டிசம்பா் 29-ஆம் தேதி திருப்பூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிங்கபூா் காம்பவுண்ட் பகுதியில் நடைபெற்ற தகராறில், அப்பகுதியில் வசித்து வந்த ரமேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் விஜய் ஆனந்த் (46) என்பவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

இந்தக் கொலை வழக்கில் விஜய் ஆனந்த் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அரசுத் தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டது. இந்த வழக்கில், திருப்பூா் மாவட்ட 2-ஆவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதா் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், விஜய் ஆனந்துக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் அபராதமாக ரூ.2,000 விதித்து உத்தரவிட்டுள்ளாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பூமதி ஆஜரானாா்.