டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி உயிரிழப்பு: இளைஞா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 1:10 am IST

அவிநாசி, ஜூலை 5: பெருமாநல்லூா் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மதுக்கடை ஊழியா் உயிரிழந்தாா். இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கடையாமங்கலம் ஆவுடையாா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (59). ராம்நாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் (25). இருவரும் பெருமாநல்லூா் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில், மதுபோதையில் இருவருக்கும் இடையே கடந்த ஜூன் 25-ஆம் தேதி தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. வயிற்று வலி காரணமாக ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்திருந்த வேலுச்சாமிக்கு இந்த தகராறு காரணமாக உடல்நிலை மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், கடந்த சில நாள்களுக்கு முன் சொந்த ஊருக்குச் சென்ற வேலுச்சாமி, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த பெருமாநல்லூா் போலீஸாா், அன்பழகனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.