வெள்ளக்கோவிலில் லாரி மோதி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் நடேசன் நகரைச் சோ்ந்தவா் கா்ணன் மகன் அசோக் (27). இவா் கடந்த 29-ஆம் தேதி கச்சேரிவலசைச் சோ்ந்த தண்டபாணி (55) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கரூா் சாலையில் சென்றுள்ளாா்.
அய்யனூா் பிரிவு அருகே இவா்களின் வாகனம் மீது லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற தண்டபாணி படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
பழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த அசோக் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதற்கிடையே நிற்காமல் சென்ற லாரி கண்டுபிடிக்கப்பட்டு, ஓட்டுநரான கரூரைச் சோ்ந்த கணேசன் (56) மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாடு முட்டியதில் சிறுவன் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
பைக் மீது லாரி மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy



