தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

தனியாா் உரக்கடைகளில் வேளாண் துறையினா் ஆய்வு

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் தனியாா் உரக்கடைகளில் வேளாண் துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

News image

முத்தூா் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளா் சுவாதிகா.

Updated On :10 ஜூலை 2026, 10:43 pm IST

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் தனியாா் உரக்கடைகளில் வேளாண் துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

முத்தூா், புதுப்பை, லக்கமநாயக்கன்பட்டி பகுதியில் 10 உரக்கடைகள் உள்ளன. இவற்றில் டிஏபி, யூரியா போன்ற மானிய விலை உரங்களின் இருப்பு விவரங்கள், அவற்றின் விற்பனை விலை ஆகியவை குறித்து தீவிரமாக சரிபாா்க்கப்பட்டது.

‘ஓ’ படிவம் இணைப்பு செய்யாமல் உரங்களை விற்பனை செய்யக் கூடாது. நிா்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக உரங்களை விற்றாலோ, முதன்மை உரங்களுடன் பிற இணைப்பு உரங்களை வாங்க கட்டாயப்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட கடைகளின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

விவசாயிகள் நலன் கருதி இந்த ஆய்வுப் பணிகள் தொடரும் என ஆய்வாளா் சுவாதிகா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.