பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காங்கயம் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

காங்கயம் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் மக்களை அச்சுறுத்தி வருவதால், அவைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

காங்கயத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்.

Updated On :12 ஜூலை 2026, 12:10 am IST

காங்கயம் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் மக்களை அச்சுறுத்தி வருவதால், அவைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

காங்கயம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக ஆட்டுப் பட்டிகளுக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக் குதறி வருகின்றன. இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான ஆடுகள் உயிரிழந்தன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். மேலும் பெண்கள், குழந்தைகளையும் நாய்கள் கடித்து வருவதால் நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.

இந்நிலையில், காங்கயத்தில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சனிக்கிழமை காலை தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வந்தன. இவைகளை அப்புறப்படுத்துவதற்கும் அல்லது கட்டுப்படுத்துவதற்கும் நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.