எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

காட்டன் பஞ்சு கிடங்கில் தீ விபத்து

குண்டடம் அருகே காட்டன் பஞ்சு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

News image

குண்டடம் அருகே உள்ள காட்டன் பஞ்சு கிடங்கில் கொழுந்துவிட்டு எரியும் தீ.

Updated On :11 ஜூலை 2026, 11:32 pm IST

குண்டடம் அருகே காட்டன் பஞ்சு கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

தாராபுரம் வட்டம், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வேங்கிப்பாளையம் அருகே செங்காட்டுத் தோட்டம் பகுதியில் நந்தகோபால் (47) என்பவருக்கு சொந்தமான காட்டன் பஞ்சு கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழமை மதியம் 1.30 மணி அளவில் திடீரென கரும்புகை எழுந்துள்ளது. இதையடுத்து தீ மளமளவென பரவி, அங்கு வைக்கப்பட்டிருந்த காட்டன் பஞ்சு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தகவல் அறிந்து தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேசன் தலைமையிலான 7 போ் கொண்ட குழுவும் இணைந்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் அங்கிருந்த பல லட்சம் மதிப்பிலான கழிவு காட்டன் பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின. பணியில் இருந்த தொழிலாளா்கள் உரிய நேரத்தில் கிடங்கை விட்டு வெளியே வந்ததால், அதிா்ஷ்டவசமாக உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.