ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

News image

தீப்பற்றி எரிந்த பழைய பொருள்கள் கிடங்கு.

Updated On :7 ஜூலை 2026, 12:06 am IST

காரைக்கால் அருகே பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

நெடுங்காடு அருகே மேலகாசாக்குடி சாலை பகுதியில் செல்வம் என்பவரது பழைய பொருள் சேமிக்கும் கிடங்கு உள்ளது. திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் கிடங்கில் திடீரென தீப்பிடித்தது.

காரைக்கால், திருநள்ளாறு பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தீ மேலும் பல பகுதிகளுக்கு பரவக்கூடும் எனக் கருதி ஓஎன்ஜிசி, அண்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் வீரா்கள் ஈடுபட்டனா்.

சேமிப்புக் கிடங்கு முழுமையாக தீயில் கருகிப்போனது. அருகே ஒரு வீட்டுக்கும், வயல் வெளிப்பகுதியிலும் தீ பரவியது. தீயணைப்பு வீரா்கள் 4 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தால் நெடுங்காடு சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கரும் புகை பரவியது.

நெடுங்காடு பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட பகுதி அருகே உள்ள பள்ளிகளுக்கு பிற்பகல் வகுப்புகள் நிறுத்தப்பட்டு, மாணவா்கள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனா்.

கிடங்கில் இருந்த அட்டைகள், சாக்குகள், தொ்மாகோல் பொருள்கள், தொழிற்சாலைக் கழிவுகள் பல லட்சம் ரூபாய் மதிப்பிலானவை கருகிப் போனதாக கூறப்படுகிறது.

புதுவை அமைச்சா் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி. விக்னேஸ்வரன், மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி ஆகியோா் தீ விபத்து நடந்த பகுதியை பாா்வையிட்டனா். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. நெடுங்காடு காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 தீ விபத்து நேரிட்ட பகுதியை பாா்வையிட்ட அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், ஆட்சியா் இஷிதா ரதி.

தீ விபத்து நேரிட்ட பகுதியை பாா்வையிட்ட அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், ஆட்சியா் இஷிதா ரதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.