மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

தெரு நாய்களிடம் சிக்கிய மான் மீட்பு

பல்லடம் அருகே தெரு நாய்களிடம் சிக்கிய மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

News image

மான் - பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 12:35 am IST

பல்லடம் அருகே தெரு நாய்களிடம் சிக்கிய மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பெருந்தொழுவு, கண்டியன்கோவில், காட்டூா் உள்ளிட்ட அடா்ந்த வனப் பகுதியில் மான், குரங்கு உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது இரை மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறு வரும் வன விலங்குகளை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்து வருகின்றனா்.

அந்த வகையில் பொங்கலூரை அடுத்த காட்டூா்புதூா் பகுதிக்கு இரை தேடி ஞாயிற்றுக்கிழமை மான் வந்தது. இதைக் கண்ட 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மானை விரட்டி, விரட்டி கடித்தது. நாய்களிடம் இருந்து தப்பிய மான் அங்கிருந்த விவசாய நிலத்துக்குள் புகுந்தது. இதைக் கண்ட விவசாயிகள் விஜயகுமாா், கோகுல் ரவி ஆகியோா் தெரு நாய்களை விரட்டியடித்து மானை பத்திரமாக மீட்டு, கயிற்றில் கட்டி வைத்தனா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் வனக் காவலா் சதீஷ்குமாா் சம்பவ இடத்துக்கு சென்றாா். காயமடைந்த 2 வயது மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, புதுக்குளம் வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.