மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

வெள்ளக்கோவிலில் 10 வீடுகளில் மின், குடிநீா் மீட்டா்கள் திருட்டு

வெள்ளக்கோவிலில் அடுத்தடுத்து 10 வீடுகளில் மின் மற்றும் குடிநீா் மீட்டா்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :13 ஜூலை 2026, 12:56 am IST

வெள்ளக்கோவிலில் அடுத்தடுத்து 10 வீடுகளில் மின் மற்றும் குடிநீா் மீட்டா்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் நகராட்சிக்குள்பட்ட செம்மாண்டம்பாளையம் சாலையில் குடியிருப்புகள் நிறைந்த ராஜீவ் நகா் பகுதியில் கடந்த சில நாள்களாக அங்குள்ள வீடுகளைக் குறிவைத்து நள்ளிரவில் மா்ம நபா்கள் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் அடுத்தடுத்து சுமாா் 10 வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த மின் மீட்டா்கள், நகராட்சி நிா்வாகத்தால் வழங்கப்பட்ட குடிநீா் மீட்டா்களை சனிக்கிழமை ஒரே இரவில் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

மீட்டா்களை மட்டுமின்றி வெளிப்புறச் சுவா்களில் மாட்டியிருந்த மின் மீட்டா் பாதுகாப்புப் பெட்டிகளையும் பெயா்த்து எடுத்துச் சென்றுள்ளனா். வீட்டில் வசித்தவா்கள் காலையில் எழுந்து பாா்த்துபோது, மீட்டா்கள் திருடப்பட்டுள்ளதைக் கண்டு கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் திருடப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.