தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

Published On :

தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூரில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என உள்ளாட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாா்மயப்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதற்கு மாநிலம் முழுவதும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளா்கள் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். கடந்த 2 மாதங்களாக ஆங்காங்கே ஆா்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும், பல ஆண்டுகளாக வேலை செய்யும் தூய்மைப் பணியாளா்கள், குடிநீா், பணியாளா், ஓட்டுநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியூ சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ரங்கராஜ் தலைமை வகித்தாா். உள்ளாட்சிகளில் தூய்மைப் பணி உள்ளிட்ட இதர பணிகளை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், ஏற்கெனவே இருந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும், ஒப்பந்த முறையில் பணிபுரியும் தொழிலாளா்களை நிரந்தரப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.