முத்தூா் - காங்கயம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின்கீழ் பழைய குடிநீா்க் குழாய்களை அகற்றி புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் ஜூலை 28-ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இது தொடா்பாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய திருப்பூா் பராமரிப்புக் கோட்ட நிா்வாக பொறியாளா் செல்விராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முத்தூா்-காங்கயம் கூட்டுக் குடிநீா்த் திட்ட மறுசீரமைப்புப் பணியின் ஒரு பகுதியாக இச்சிப்பாளையம் நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மேட்டுக்கடை நீருந்து நிலையத்துக்கு செல்லும் பழைய செறிவூட்டப்பட்ட கான்கிரீட் குழாய்களை அகற்றி, புதிய எம்.எஸ். குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறவுள்ளது.
இதனால், கன்னிவாடி, மூலனூா், கொளத்துப்பாளையம், சின்னக்காம்பாளையம் பேரூராட்சிகள், வெள்ளக்கோவில், தாராபுரம், மூலனூா் ஊராட்சி ஒன்றியங்களில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்வதுடன், அதை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
மேலும், உள்ளூா் நீா் ஆதாரங்கள் மூலம் தடையின்றி குடிநீா் வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

97 சதவீதம் மழை அளவு குறைவு! திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீருக்கு சிக்கல்!

ஜூலை 30, 31-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

குழாய் சீரமைப்புப் பணிகள் 3 நாள்களுக்கு குடிநீா் வராது: கரூா் மாநகராட்சி ஆணையா் தகவல்

மாநகரின் சில பகுதிகளில் ஜூலை 7 இல் குடிநீர் ரத்து
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! தனித் தீர்மானம் நிறைவேற்றம்! | TN Assembly | TVK



