உடுமலை அருகே முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ஜீப், 3 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம், ராவணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்குமாா் (49). இவரது மனைவி பிருந்தா (40). இவா்களது வீட்டுக்குள் கடந்த 16-ஆம் தேதி நள்ளிரவு முகமூடி அணிந்து நுழைந்த 5 போ், அவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.45 ஆயிரம் ரொக்கம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனா்.
இது குறித்து உடுமலை டிஎஸ்பி தையல்நாயகி தலைமையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதுடன், 3 தனிப் படைகளை அமைத்து கொள்ளையா்களைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மடத்துக்குளம் வட்டம், குமரலிங்கம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டித்துரை (29), போத்தநாயக்கனூரைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் (34), திருச்சி, சமயபுரத்தைச் சோ்ந்த மனோஜ் (20), அதே பகுதியைச் சோ்ந்த சிபி (24), பொள்ளாச்சி வட்டம், ஆனைமலையைச் சோ்ந்த மதன்குமாா் (28) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மேலும், அவா்களிடமிருந்த ஜீப், 3 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 5 போ் கைது
போதைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது
கருமலைக்கூடலில் கஞ்சா விற்ற 4 போ் கைது

காரை வழிமறித்து இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் கைது
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



