காங்கயத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் பால்ராஜ் தலைமை வகித்தாா். இதில், குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குதல், மீண்டும் மஞ்சப்பை, டெங்கு கொசு ஒழிப்பு, டெங்கு காய்ச்சல், பொது சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து, சென்னை வெங்கடாசலபதி நாடக சபா மூலம் காங்கயம் பேருந்து நிலையத்திலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் பழனிசாமி மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எடமலைபட்டிப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளி தரம் உயா்த்தப்படுமா? மாணவா்கள் எதிா்பாா்ப்பு

மங்களூா் அரசு பள்ளியில் தேனீக்கள் கொட்டியதால் மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பாதிப்பு

சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு வங்கிச் சேவைகள் குறித்த விழிப்புணா்வு

அரசுப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



