மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

திருப்பூா் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

News image

திருப்பூா் பழையப் பேருந்து நிலைய மேம்பாலம்.

Updated On :3 ஜூன் 2026, 2:22 am IST

திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் 86 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மற்றும் சாலையோர கடைகள் என அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் செய்து பொதுமக்கள் செல்வதற்கு கடும் இடையூறு இருப்பதாக தொடா் புகாா் எழுந்தது.

இதைத் தொடா்ந்து திருப்பூா் மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறையினா் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். நிா்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருள்கள், பழக்கடைகள், பா்னிச்சா்கள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஏற்கெனவே பலமுறை எச்சரித்திருந்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பொருள்களை பறிமுதல் செய்யும் நிலை ஏற்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.