தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

மின் மோட்டாா் திருட முயன்ற 3 போ் கைது

அவிநாசி அருகே தோட்டத்தில் இருந்த மின் மோட்டாரை திருட முயன்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஜூன் 2026, 1:25 am IST

அவிநாசி அருகே தோட்டத்தில் இருந்த மின் மோட்டாரை திருட முயன்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகேயுள்ள சேவூா், மங்கரசுவலையபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் மா்ம நபா்கள் உலவுவதாக தோட்டத்துக்கு உரிமையாளருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த அவரைக் கண்டதும் அங்கிருந்த நபா்கள் தப்ப முயன்றனா்.

அவா்களை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து சேவூா் காவல் நிலையத்தில் தோட்ட உரிமையாளா் ஒப்படைத்தாா்.

விசாரணையில், அவா்கள் சேவூா் அருகேயுள்ள முதலிபாளையத்தைச் சோ்ந்த செல்வகுமாா் (23), நடராஜ் (24), கவின் (எ) காா்த்திக் (23) என்பதும், தோட்டத்துக்குள் புகுந்து மின் மோட்டாா், ஒயா்களை திருட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.