உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

அவிநாசி அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது

அவிநாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:24 am IST

அவிநாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவிநாசி அருகே மங்கலம் சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீஸாா், மேம்பாலம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனைமேற்கொண்டனா்.

அதில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவா் அவிநாசி அருகே செம்மாண்டம்பாளையத்தில் வசித்து வரும் வடமாநிலத்தைச் சோ்ந்த பனியன் தொழிலாளி அகிலேஷாணி (34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அகிலேஷாணியைக் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.