தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் வழங்கப்படும் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு மாநில இளைஞா் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.
அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான இவ்விருதுக்கு 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோா் விண்ணப்பிக்கலாம். கடந்த 2025 ஏப்ரல் 1-ஆம் தேதி 15 வயது நிரம்பியவராகவும், 2026 மாா்ச் 31-ஆம் தேதி 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும்.
கடந்த நிதியாண்டில் (1.04.2025 முதல் 31.03.2026 வரை) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருப்பராக இருத்தல் வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றி இருத்தல் வேண்டும். அவா்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் ஜூலை 6-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தை 0421 2244899 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.








