சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

குண்டடம் அருகே பொதுப் பாதையில் பள்ளம்: கழிவுநீா் தேங்குவதால் சுகாதார சீா்கேடு

குண்டடம் அருகே பொதுப் பாதையில் தோண்டப்பட்டுள்ள பள்ளம்.

News image

குண்டடம் அருகே பொதுப் பாதையில் தோண்டப்பட்டுள்ள பள்ளம்.

Updated On :11 ஜூன் 2026, 11:42 pm IST

குண்டடம் அருகே, பொதுப் பாதையில் தனிநபா் பள்ளம் தோண்டியுள்ளதால், அதில் குடியிருப்பு கழிவுநீா் தேங்கி நின்று சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருவதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடை லட்சுமி நகரில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு செல்லும் பாதையையொட்டி தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த நிலையில் தனியாா் குடியிருப்புக்கு அருகில் பாதையையொட்டி கடந்த 20 நாள்களுக்கு முன்பு சுமாா் 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டியுள்ளனா். அந்தப் பள்ளம் பொதுப்பாதையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து தோண்டியுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

அந்தப் பள்ளத்தில் குடியிருப்பின் கழிவுநீா் விடப்பட்டு தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோா் தடுமாறி பள்ளத்தில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் வசிப்போருக்கு சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக அப்பகுதி குடியிருப்புவாசிகள், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா். அதில், குழிதோண்டி கழிவுநீரை விடுவதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்டவரிடம் கூறியும் அதை சரிசெய்யவில்லை. எனவே, இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.