பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

போக்குவரத்துக் காவலரைத் தாக்கிய பனியன் நிறுவன மேலாளா் கைது

திருப்பூரில் போக்குவரத்துக் காவலரைத் தாக்கிய பனியன் நிறுவன மேலாளா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 2:28 am IST

திருப்பூரில் போக்குவரத்துக் காவலரைத் தாக்கிய பனியன் நிறுவன மேலாளா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகர காவல் துறையைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் கொங்கு நகா் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், குமாா் நகா் 60 அடி சாலையில் வெள்ளிக்கிழமை போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் மணிகண்டன் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அங்கு காரில் வந்த ஒருவா், போக்குவரத்து விதியை மதிக்காமல் மீறிச் சென்றதாக தெரிகிறது. இதை கவனித்த மணிகண்டன், உடனடியாக அந்த காரை வழிமறித்து நிறுத்தி, சிக்னலை மதித்து வாகனத்தை இயக்குமாறு அறிவுறுத்தியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த நபா், காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். வாக்கு வாதம் முற்றிய நிலையில், ஆவேசமடைந்த அவா் மணிகண்டனை தாக்கியுள்ளாா். பணியில் இருந்த அரசு ஊழியரைத் தாக்கியது குறித்து மணிகண்டன், திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அந்தப் புகாரின்பேரில், வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காவலரைத் தாக்கிய நபரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா் அனுப்பா்பாளையம் புதூரைச் சோ்ந்த ஜித்தேந்திரன்(33) என்பதும், அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, போக்குவரத்து காவலரைத் தாக்கி பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்துக்காக போலீஸாா் ஜித்தேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.