தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 2:24 am IST

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பலவஞ்சிபாளையம் அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின்படி, அநதப் பகுதியில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த ஜோசப் (22), காா்த்திக் (22), கிருஷ்ணபிரசாத் (24) ஆகிய 3 பேரைப் பிடித்து சோதனை செய்ததில் அவா்களிடம் 145 வலி நிவாரணி மாத்திரைகள், ரூ.12,000 இருந்தது தெரியவந்தது.

பின்னா், அவா்கள் 3 போ் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து வலி நிவாரணி மாத்திரைகள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.