இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

அயனிங் ஸ்டீம் குழாய் வெடித்ததில் எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் அயனிங் ஸ்டீம் குழாய் வெடித்ததில் எலக்ட்ரீஷியன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 4:01 am IST

பெருமாநல்லூா் அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் அயனிங் ஸ்டீம் குழாய் வெடித்ததில் எலக்ட்ரீஷியன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தோரணவாவி பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (35). இருவருக்கு மனைவி சங்கீதா, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், நியூ திருப்பூா் பகுதியில் செயல்பட்டு வரும் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் செல்வகுமாா் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், துணிகளை அயன் செய்யும் ஸ்டீம்மில் வியாழக்கிழமை கசிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அதை சரி செய்யும் பணியில் செல்வகுமாா் ஈடுபட்டிருந்தபோது, ஸ்டீம் குழாய் திடீரென வெடித்துள்ளது. இதில், படுகாயமடைந்த செல்வகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருமாநல்லூா் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செல்வகுமாா்

செல்வகுமாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.