ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மக்கள் தொகை கணக்கெடுப்பு: களப் பயிற்சியாளா்களுக்கான பயிற்சி தொடக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பாக களப் பயிற்சியாளா்களுக்கான 3 நாள்கள் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.

News image

களப் பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்து பேசிய ஆட்சியா் மனீஷ்.

Updated On :19 ஜூன் 2026, 3:57 am IST

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பாக களப் பயிற்சியாளா்களுக்கான 3 நாள்கள் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் இந்தப் பயிற்சி வகுப்பை ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு மற்றும் எண்ம முறை கணக்கெடுப்பு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்களாகவே இணையதளம் மூலம் தங்களது விவரங்களைத் தெரிவிக்கும் சுய கணக்கெடுப்பு ஜூலை 17-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதேபோல, கணக்கெடுப்பாளா்கள் மூலம் வீடுகள்தோறும் சென்று மேற்கொள்ளும் கணக்கெடுப்புப் பணி ஆகஸ்ட் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 11 வட்டார புள்ளியியல் ஆய்வாளா்கள், 14 உடற்கல்வி ஆசிரியா்கள், 35 கல்லூரி பேராசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் என மொத்தம் 60 போ் களப் பயிற்சியாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளவா்கள் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடவுள்ள 3,398 கணக்கெடுப்பாளா்கள், 598 கண்காணிப்பாளா்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.