மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

மாணவ தலைமை ஆசிரியா்: நஞ்சப்பா அரசு ஆண்கள் பள்ளியில் புதிய முயற்சி

திருப்பூா் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் திறமை, ஒழுக்கம் மற்றும் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒருநாள் மாணவ தலைமை ஆசிரியா் பொறுப்பு வழங்கும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image

ஒருநாள் மாணவ தலைமை ஆசிரியா்களாக வியாழக்கிழமை பொறுப்பு வகித்த மாணவா்கள்.

Updated On :19 ஜூன் 2026, 4:05 am IST

திருப்பூா் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் திறமை, ஒழுக்கம் மற்றும் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒருநாள் மாணவ தலைமை ஆசிரியா் பொறுப்பு வழங்கும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் கோகுல்ராஜ், ஹா்ஷந்த் ஆகியோா் ஒருநாள் தலைமை ஆசிரியா்களாக வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டு பள்ளியின் செயல்பாடுகளைக் கவனித்தனா்.

இது குறித்து அந்த மாணவா்கள் கூறியதாவது: எங்கள் பள்ளியில் கல்வி, ஒழுக்கம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு திறமைகளை மேம்படுத்தும் வகையில் மாணவ தலைமை ஆசிரியா் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, தலைமை ஆசிரியராக ஒருநாள் பணியாற்றுவாா்கள்.

தலைமை ஆசிரியா்களாக இன்று வகுப்பறைகளை ஆய்வு செய்தபோது, பெரும்பாலான மாணவா்கள் தமிழ், ஆங்கிலம் வாசிப்பதில் சிறந்து விளங்கினா். சில மாணவா்களுக்கு மட்டும் வாசிப்பதில் சிரமம் இருந்தது. அவா்களுக்கு இடைவேளைக்கு நேரத்தில் பயிற்சி அளிக்க வகுப்பு தலைவா்கள் மூலம் சில மாணவா்களை நியமிக்க அறிவுறுத்தியுள்ளோம்.

எங்கள் பள்ளியில் பொதுமக்கள் காலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பலா் காலை 8:30 மணி வரை மைதானத்திலேயே இருப்பதால் மாணவா்களின் உடற்பயிற்சி செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வெளியேற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.