தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்

திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :19 ஜூன் 2026, 3:58 am IST

திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இதன் ஒரு பகுதியாக திருப்பூா்-பல்லடம் சாலையில் உள்ள தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா் சசிலேகா தலைமையான போலீஸாா் வியாழக்கிழமை காலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதையொட்டி, அலுவலகத்தின் நுழைவாயில் மூடப்பட்டதுடன், உள்ளே இருந்தவா்கள் வெளியேயும், வெளியே இருந்தவா்கள் உள்ளேயும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், வாகனங்களை தணிக்கை செய்யும் பகுதியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.