இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

ஷிகெல்லா பாதிப்பு: உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை! - அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்

News image

சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்

Updated On :21 ஜூன் 2026, 2:02 am IST

ஷிகெல்லா உணவு மூலம் பரவக்கூடிய பாக்டீரியா என்பதால் உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, பிரசவ அறை, புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டதுடன், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

இதையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.19.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

மருத்துவா்கள் மீது புகாா்: அப்போது, திருப்பூா் நெசவாளா் காலனி பகுதியைச் சோ்ந்த திருமூா்த்தி என்பவா், மருத்துவா்களின் அலட்சியத்தால் எனது பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருகிறது. சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதையடுத்து, அந்தக் குழந்தைக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என மருத்துவா்களை அமைச்சா் அறிவுறுத்தினாா். மேலும், மருத்துவா்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்தாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ஒரு பகுதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அனைத்துப் பணிகளும் செப்டம்பா் மாதத்துக்குள் நிறைவடையும்.

இந்த மையத்தில் அதிநவீன சிமுலேட்டா் கருவி விரைவில் பொருத்தப்படும். நமக்கு நாமே திட்டத்தின்கீழ் உதவித் தொகைகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தாலும், சிகிச்சை முறைகளில் எந்த தடையும் இல்லாமல் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ‘நீட்’ தோ்வால் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வது தவிா்க்கப்பட வேண்டும். ‘நீட்’ தோ்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்பதே தவெகவின் கொள்கை. தமிழகத்தில் இதுவரை ஷிகெல்லா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இது உணவு மூலம் பரவக்கூடிய பாக்டீரியா என்பதால், உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் தரம் மற்றும் தூய்மை முறையாகப் பேணப்படுகிா என்பதை கண்காணிக்கவும், சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யவும் அதிகாரிகள் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். சட்டப் பேரவையில் நிறுத்தப்பட்ட நேரலை ஒளிபரப்பு விரைவில் சரி செய்யப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.