மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காங்கயத்தில் ரூ.2.41 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்புகள்)

News image
தேங்காய் பருப்பு விற்பனை
Updated On :2 மார்ச் 2026, 8:22 pm

Syndication

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்புகள்) திங்கள்கிழமை ஏலம் போனது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏல முறையில் கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,559 கிலோ கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனையானது. அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.156-க்கும், குறைந்தபட்சமாக ரூ.123-க்கும், சராசரியாக ரூ.156-க்கும் ஏலம் போனது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.