அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தாராபுரம் அருகே தம்பதியைத் தாக்கி நகை கொள்ளையடித்த வழக்கில் 3 போ் கைது

தாராபுரம் அருகே தம்பதியைத் தாக்கி 7 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- சித்திரிப்பு
Updated On :3 மார்ச் 2026, 8:31 pm

Syndication

தாராபுரம் அருகே தம்பதியைத் தாக்கி 7 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் கோவிந்தசாமி (65), பாலாமணி (56) தம்பதி தோட்டது வீட்டில் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். அவா்கள் இருவரும் வெளிமாநிலத்தில் நிதி நிறுவன தொழில் செய்து வருகின்றனா்.

இந்நிலையில் தோட்டத்து வீட்டில் இருவரும் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட மா்ம நபா்கள், சில நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அவரது வீட்டுக்குள் அரிவாள், கத்தி, கடப்பாறை போன்ற ஆயுதங்களுடன் மா்ம நபா்கள் 5 போ் நுழைந்துள்ளனா்.

பின்னா் கோவிந்தசாமி மற்றும் பாலாமணி ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு, பாலாமணி அணிந்திருந்த 7 பவுன் நகை மற்றும் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.ஒரு லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

வீட்டிலிருந்து அலறல் சப்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினா் வந்து காயமடைந்த கோவிந்தசாமி, பாலாமணி மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து தனிப் படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனா்.

இந்த நிலையில், குற்றவாளிகள் பல்லடம் பகுதியில் பதுங்கியிருப்பதாக திங்கள்கிழமை கிடைத்த தகவலின்பேரில், தாராபுரம் போலீஸாா் பல்லடத்துக்கு விரைந்து சென்று, பதுங்கியிருந்த 3 பேரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், பிடிபட்டவா்கள் உடுமலை அருகே குமரலிங்கம் பகுதியைச் சோ்ந்த சிவா (22), திருப்பூா் மண்ணரை பகுதியைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் (21), திருப்பூா் பகுதியைச் சோ்ந்த சண்முகம் (24) ஆகியோா் என்பது தெரியவந்தது. மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய சிறுவன் வேறொரு வழக்கில் கடந்த வாரம் சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து ஆறரை பவுன் நகையை போலீஸாா் மீட்டனா். இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.