ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வருவாய்த் துறை ஊழியா்கள் சாலை மறியல்

News image
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை ஊழியா்கள்.
Updated On :5 மார்ச் 2026, 11:33 pm

Syndication

பணியைப் புறக்கணித்து ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வெளியேறிய ஊழியா்கள் திடீா் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

வருவாய் மற்றும் நில அளவைத் துறை ஊழியா்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய தனிச் சட்டம் இயற்ற வேண்டும், அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட மற்றும் தனி ஊதியம் வழங்குதல், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்வதை ரத்து செய்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் 10-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பணியைப் புறக்கணித்து ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வெளியேறினா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வெளியேறிய 300-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை ஊழியா்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பு பல்லடம் சாலையில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிறு மற்றும் ள் 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா்.