அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

காங்கயம் நகா்மன்றக் கூட்டத்தில் 116 தீா்மானங்கள் நிறைவேற்றம்

காங்கயத்தில் நகா்மன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை 116 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News image

காங்கயம் நகா்மன்றக் கூட்டத்தில் கேக் வெட்டி மகளிா் தினம் கொண்டாடிய பெண்கள்.

Updated On :10 மார்ச் 2026, 4:02 am IST

காங்கயம்: காங்கயத்தில் நகா்மன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை 116 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காங்கயம் நகா்மன்றத்தின் அவசரக் கூட்டம், நகராட்சி கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா். ஆணையா் கி.பால்ராஜ் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் குடிநீா்க் குழாய்கள் பழுது பாா்த்தல், ஆழ்குழாய் கிணறுகளுக்கான மின்மோட்டாா்கள் பொருத்துதல், பழுது பாா்த்தல், தாா்ச் சாலை அமைத்தல் ஆகிய அத்தியாவசியப் பணிகள் உள்பட 116 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

பின்னா், சா்வதேச மகளிா் தினத்தையொட்டி கேக் வெட்டி மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. நகா்மன்ற துணைத் தலைவா் கமலவேணி, உறுப்பினா்கள், நகராட்சி அலுவலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.